சிவமயம்
திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனம் 10வது குருமகாசந்நிதானம்
ஸ்ரீவேலப்பதேசிக சுவாமிகள்
326-ஆவது குருபூஜை விழா அழைப்பிதழ்
நாள் : 16.10.2026 வெள்ளிக்கிழமை (புரட்டாசி 29)
அன்புடையீர்!
நிகழும் மங்களகரமான 1202ஆம் ஆண்டு பராபவ வருடம் புரட்டாசி மாதம் 29 ஆம் தேதி (16.10.2026) வெள்ளிக்கிழமை மூல நட்சத்திரத்தில், திருவாவடுதுறை ஆதீன 10ஆவது குருமூர்த்திகள் ஸ்ரீவேலப்பதேசிக சுவாமிகளின் 326 ஆவது குருபூஜை விழா நிகழ்வதை முன்னிட்டு குருமூர்த்திகள் ஜீவன்முத்தராக இருந்து அருள்பாலித்து வருகின்ற சங்கரன்கோவில் மேலரதவீதியில் உள்ள திருவாவடுதுறை ஆதீனக் கிளை மடத்தில் திருவாவடுதுறை ஆதீனம் 24ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் அவர்களின் அருளாசியுடன் அபிஷேக ஆராதனை, நூல் வெளியீடு, மகேஸ்வர பூஜை, சொற்பொழிவு நிகழ்ச்சி மற்றும் திருமுறை இன்னிசை நிகழ்ச்சிகள் குறித்தவண்ணம் நடைபெற உள்ளது.
மெய்யன்பர்கள், சைவ சித்தாந்தச் செந்நெறியாளர்கள் மற்றும் உள்ள அன்பர்கள் அனைவரும் வருகைதந்து விழாவினைச் சிறப்பித்து குருவருளும், திருவருளும் பெற்று சிவானந்தத்தில் இன்புற்றுத் திளைக்கத் தெரிவிக்கலானோம்.
அருளாணையின் வண்ணம்,
காறுபாறு – வைத்தியநாதத் தம்பிரான்,
திருவாவடுதுறை ஆதீனம்
அழைப்பிதழை பதிவிறக்க கீழே சொடுக்கவும்
அழைப்பிதழை புத்தக வடிவில் காண கீழே சொடுக்கவும்
குரு பூஜை விழா அழைப்பிதழ் புத்தகம்




